இலங்கை

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தேரர்களை பார்வையிட்டார் விமல்!

  • January 16, 2026
  • 0 Comments

திருகோணமலை கடற்கரையில் அனுமதி இல்லாமல் கடலோரப் பாதுகாப்பு சட்டங்களை மீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்குகளை விமல்வீரவன்ச சந்தித்துள்ளார். திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், தேரர்களை சந்தித்துள்ளார். தொடர்புடைய செய்தி திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பௌத்த பிக்கு உட்பட 08 பேருக்கு விளக்கமறியல்!      

உலகம் செய்தி

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை

  • January 16, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol), அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சியோல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட தோல்வியடைந்த இராணுவச் சட்ட அமுலாக்கம் தொடர்பான வழக்குகளில் வெளியாகியுள்ள முதல் தீர்ப்பு இதுவாகும். இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்கத் தவறியது மற்றும் தனது கைதை மறைக்க ஆவணங்களைத் […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் “டித்வா புயல்”!

  • January 16, 2026
  • 0 Comments

டித்வா புயல் சம்பந்தமாக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதற்கான யோசனை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் இது தொடர்பில் விவாதம் நடத்தப்படவுள்ளதென தெரியவருகின்றது. டித்வா புயல் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும், உரிய முன்னாயத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எங்கே தவறு நடந்துள்ளது, பொறுப்பு கூற வேண்டியது யார் என்பது தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தின. இந்நிலையில் தெரிவுக்குழு அமைப்பதற்குரிய யோசனை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. […]

செய்தி

அழகு தமிழ் பேசிய அநுர: சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்த காணொளி!

  • January 16, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake யாழ்.மண்ணில் நடை பயிற்சியில் ஈடுபடும் காணொளி வைரலாகியுள்ளது. தனக்கு காலை வணக்கம் சொன்ன இளைஞர் ஒருவருக்கு ஜனாதிபதி தமிழில் பதில் அளிப்பதும் பலரது பாராட்டடை பெற்றுள்ளது. தைப்பொங்கல் நிகழ்வு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு Jaffna பயணம் மேற்கொண்டுள்ளார். பொங்கல் நிகழ்வுகளில் நேற்று பங்கேற்ற ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி நடை பயிற்சியில் ஈடுபட்டார். அவரை சூழ […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பே அவசியம் – விமல்

  • January 16, 2026
  • 0 Comments

” நாட்டில் கல்வி மறுசீரமைப்பென்பது Education reform சிறப்பான பண்புகளுடன் இடம்பெற வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். எனினும், கட்சியொன்றின் தேவைக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையை ஏற்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கை. அப்பணியை முன்னெடுக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது இரண்டாவது விடயமாகும். எனவே, எமது முதலாவது […]

இந்தியா

திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்திய மோடி!

  • January 16, 2026
  • 0 Comments

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று விடியோவொன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் நாளை முன்னிட்டே அவர் இவ்வாறு விடியோ வெளியிட்டுள்ளார். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் […]

உலகம்

அமெரிக்காவுடன் ஏற்பட்ட விரிசல் – சீனாவுடன் கைகோர்க்கும் கனடா!

  • January 16, 2026
  • 0 Comments

கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) , ஆழமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்காக சீனாவிற்கு 04 நாள் பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் கனடா தனது சர்வசேத உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முக்கிய பகுதி சீனாவுடன் உறவுகளை புதுப்பிப்பதாகும். இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கும் அவர், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு “புதிய மூலோபாய கூட்டாண்மையை” முன்மொழிவார் எனக் கூறப்படுகிறது. […]

உலகம்

எவ்வித சலனமும் இன்றி வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

  • January 16, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் மற்றுமொரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இதுவரை 06 கப்பல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. கயானா நாட்டின் கொடியுடன் பயணித்த  வெரோனிகா’ எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், நேற்று அதிகாலை கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்பரப்பில் எவ்வித மோதலும் இன்றி கப்பலை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் ( Kristi Noem), குறித்த கப்பல் ட்ரம்பின் தடை உத்தரவை மீறி செயற்பட்டுள்ளதாக குற்றம் […]

உலகம்

சீனா மீதான அச்சம் : அமெரிக்காவிற்கே முதலிடம் எனக் கொக்கரிக்கும் ட்ரம்ப்!

  • January 16, 2026
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் அமெரிக்காவிற்கே முதலிடம் என்ற கொள்கை  சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரித்து வருவதை குறிப்பிடுவதாக ஐரோப்பிய வெளியுறவு கவுன்சில் (ECFR) நடத்திய கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 21 நாடுகளில் கிட்டத்தட்ட 26,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 54% அமெரிக்கர்களும் 53% ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களும் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்கள் அடுத்த பத்தாண்டுகளில் சீனா அதிக செல்வாக்கு மிக்கதாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளனர்.  அத்துடன் சீனாவை  எதிரியாகக் கருதுபவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும்  இந்த […]

இலங்கை

பால் தேநீரின் விலை குறைப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

பால் தேநீரின் விலையை  குறைக்க அகில இலங்கை உணவகம் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்மைய இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதிகளின் விலை 125 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பொதிகளின் விலை 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.