தங்கள் அன்பிற்கினியவர்களின் அஸ்தியை சுவிசுக்கு அனுப்பி வைக்கும் ஜேர்மானியர்கள் -வெளிவந்த பிண்னனி
ஜேர்மானியர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் அஸ்தியை சுவிட்சர்லாந்துக்கு அனுப்பும் நடைமுறை அதிகரித்துவருகிறதாம். ஜேர்மனியில் இறந்தவர்களைப் புதைப்பது, அல்லது இறந்தவர்களின் அஸ்தியைப் புதைப்பது, கரைப்பது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஜேர்மனியின் பெரும்பாலான பகுதிகளில், கல்லறைகள் தவிர்த்து வேறெங்கும் இறந்தவர்களின் உடல்களையோ அல்லது அஸ்தியையோ புதைக்கவோ கரைக்கவோ அனுமதி இல்லை. உண்மையில், தொற்றுநோய்கள் பரவுவதைத் தவிர்ப்பதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அது இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டுவருவதால், தங்கள் அன்பிற்குரியவர்களின் உடல் அல்லது அஸ்தியை ஜேர்மானியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் […]













