ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் – பொலிஸார் எச்சரிக்கை

  • April 24, 2023
  • 0 Comments

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் தொலைபேசி மூலம் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடிகள் நடைபெற்றுள்ளதனை தொடர்ந்து பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். டியுஸ்பேர்க் நகரத்தில் சில கும்பல் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வங்கியில் கடமையாற்றுகின்றதாக தெரிவித்து அறிமுகப்படுத்தியள்ளனர். மேலும் முதியவர்களின் வங்கி அட்டைகளை சரி பார்க்க வேண்டும் என்று தொலைபேசியின் மூலம் கூறி […]

இலங்கை

இலங்கை கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்சரிக்கை

  • April 24, 2023
  • 0 Comments

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். காசல் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர் வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “கர்ப்பிணித் தாய்மார்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். நீங்கள் வழக்கமாக 2 லிட்டர் தண்ணீர் குடித்தால், சுமார் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். […]

இலங்கை

இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் மாணவி

  • April 24, 2023
  • 0 Comments

இரத்தினபுரியில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ்மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் கணேசன் ருச்ஷானி (வயது 15) என்ற மாணவியே, இம்முறை எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வீட்டில் போதிய […]

தமிழ்நாடு

வேலை நேரத்தை உயர்த்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு – பணிபகிஸ்கரிப்பை அறிவித்த தொழிற்சங்கங்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,   இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  ம.தி.மு.க.,  வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 12-ம் திகதி  தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன. சிஐடியூ மற்றும் ஏஐடியூசிஇ எச்.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிக்ள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் மோதி விபத்து – மூவர் பலி!

  • April 23, 2023
  • 0 Comments

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில்  22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மகள் திருமணம்; விசா இன்றி கலந்து கொண்ட இந்திய பெற்றோர்..!

  • April 23, 2023
  • 0 Comments

விருந்தினர் விசா கிடைக்காததால் மகளது திருமணத்திற்கு செல்ல புதிய வழியை கண்டுபிடித்த, பெற்றோரின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வரும் சுனில் தார் என்பவர் தனது மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருக்கு டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மணமகளாக பேசி முடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இருவருக்கு அமெரிக்காவில் திருமணம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அமெரிக்காவின் விருந்தினர் விசாவை பெற சில சமயம் ஓராண்டு கூட ஆகும் என்பதால் விருந்தினர் விசா […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகர் சரத் பாபுவின் உடல்நிலைக் கவலைக்கிடம்!

  • April 23, 2023
  • 0 Comments

பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 71 வயதான சரத்பாபு விரைவில் குணமடைந்து நலம்பெற பிரபலங்கள்,  சக நடிகர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமீபத்திய அறிக்கைகளின்படி   உடல்நலக்கோளாறு காரணமாக சரத்பாபுவை ஹைதராபாத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தின்  கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் சற்று கவலைக்குரிய உடல் நலத்தில் இருந்து உடல்நலனில் தேறி […]

ஆப்பிரிக்கா

காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் கண்பிடிக்கப்பட்ட 21 சடலங்கள்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

  • April 23, 2023
  • 0 Comments

கென்யா நாட்டில் காஹோலா காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவினை தவிர்த்து விரதமிருந்தால் சொர்க்கத்திற்கு செல்முடியும். என்ற கருத்தை பாதிரியார் ஒருவர் முன்னெடுத்த நிலையில் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டள்ளனர். இருப்பினும், இந்த கருத்தை பரப்பிய பாதிரியார் கைது செய்யப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாணையின் போதே இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.உயிரிழந்தவர்களில் சிறு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சடலங்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கையொப்பம் திரட்டல்

  • April 23, 2023
  • 0 Comments

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை கிளிநொச்சி சேவைச்சந்தை பிரதான வாயிலில் இடம்பெற்ற குறித்த கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் மக்கள் பலரும் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர். குறித்த கையொப்ப பிரதிகளானதுஇ அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை பகிரங்கப்படுத்த வேண்டும்!

  • April 23, 2023
  • 0 Comments

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தரப்பினரிடமிருந்து 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர் யார் என்பதை நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நஷ்ட ஈட்டை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்த […]