12 மில்லின் ரூபாய் பெறுமதியான போதை பொருளை கடத்திய இருவர் கைது!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் பயணித்த காரை இராணுவ புலனாய்வு பிரிவினர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதன்போது வாகனத்தினுள் நூதனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருள் 12 மில்லியன் […]













