சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின்னர் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்துகிறது. சுகாதாரத்துறையில் நாளுக்கு நாள் பதிவாகும் சம்பவங்கள் தொடர்பில் மக்களின் அதிருப்தியை களைவதற்கு சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். சிறுநீரகம் தொடர்பான சத்திரசிகிச்சையின் பின்னர் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று […]













