இலங்கை

பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த மோசமான செயல் அம்பலம்! சக ஆசிரியைக்கு ஏற்பட்ட நிலை

ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர்.

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.

அப்போது, ​​அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், பின்னர் திரும்பி வந்து, தனது கைப்பையில் இருந்த தாலி கொடியை பார்த்த போது, அது இல்லாததால், சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிட்டுள்ளார்.

பின்னர், அதிபர் வந்து மாணவர்களிடம் விசாரித்ததில், மற்றொரு ஆசிரியை அவரது கைப்பையை திறந்து பார்த்தது தெரியவந்தது.

பின்னர் சம்பவம் தொடர்பில் அதிபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிசார் வந்து சந்தேகநபரான ஆசிரியையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் தாலி கொடியை திருடியதை ஒப்புக்கொண்ட அவர், திருடிய நகையை பாடசாலையின் பாதுகாப்பு வேலிக்கு அருகில் சிறிய குழி தோண்டி புதைத்து மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், சந்தேகத்திற்குரிய ஆசிரியரை பொலிசார் கைது செய்து புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்