இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!

  • September 4, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தற்போது டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 29 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் 30 ஆயிரத்து 271 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் ஆபத்தான கொவிட் திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • September 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கொவிட் 19 வைரசின் புதிய திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட் 19 வைரசின் ஒரு பிரிவான ஒமிக்ரோனில் (Omicron) இருந்து இந்த புதிய வைரஸ் திரிவடைந்துள்ளது. அதற்கு BA.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் ஐரோப்பாவின் சில நகரங்களில் இந்த திரிபு கண்டறியப்பட்டிருந்தது இந்த நிலையில், Grand Est மாகாணத்தில் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மீஇந்த புதிய திரிபு ஆபத்தான ஒன்றாக இருதப்பட்டாலும், […]

இலங்கை

ஜெர்மனி அரச சேவைகளினால் கடும் நெருக்கடியில் மக்கள்

  • September 4, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அரச பொது சேவைகளில் பொது மக்களுக்கான சேவைகள் பாதிப்பு அடைந்து வருகின்றன. ஜெர்மனியில் அரச நிர்வாகங்களால் சில கால தாமதங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். அதனால் அரச நிர்வாக கட்டமைப்பை சில மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியானது புதிய சட்ட நகலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக எவர் ஒருவர் ஹொட் டேல் என்று சொல்லப்படுகின்ற இருப்பிடத்துக்கு செல்லும் பொழுது ஜெர்மன் பிரஜையானவர் வதிவிட பதிவு விண்ணப்ப பத்திரம் ஒன்றை பூர்த்தி […]

இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் ஏற்பட்டுள்ள நன்மை

  • September 4, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாதத்தில் 54 கோடியே 10 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி அனுப்பி இலங்கைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 27 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் […]

உலகம் செய்தி

முகத்தில் பச்சை குத்திய காதலனின் கொடூரம்; இளம் பெண்ணுக்கு உதவிய அந்நிய நபர்

  • September 3, 2023
  • 0 Comments

முகத்தில் பச்சை குத்தியதால் வாழ்க்கையே பாழாகிய அமெரிக்கப் பெண்ணான டெய்லர் ஒயிட் என்பவருக்கு ஒரு இளம் அந்நியர் உதவியுள்ளார். முழு முகத்தில் பச்சை குத்திய பிறகு, டெய்லர் ஒயிட் வேலை கிடைக்காமல் எல்லா இடங்களிலும் இருந்து நீக்கப்பட்டார். டிக் டோக் மூலம் டெய்லர் ஒயிட் தனது உடல்நிலையை வெளிப்படுத்தியபோது உலகுக்குத் தெரிந்தது. 21 வயதில் ஒயிட்டின் வாழ்க்கை மாறியது. பிறந்தநாள் பார்ட்டிக்காக தனது காதலனுடன் மதுபான விடுதிக்குச் சென்றபின் டெய்லர் ஒயிட் மயக்கமடைந்தார், பின்னர் காதலன் அவள் […]

உலகம் செய்தி

கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட இளம் பெண்!! பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

  • September 3, 2023
  • 0 Comments

இதுபோன்ற பல செய்திகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து வருகின்றன, அவை கேட்கும் போது நெஞ்சை பதற வைக்கின்றன. செப்டம்பர் 3ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த பொலிஸார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறினர். லாகூரில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் ராஜன்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பெண்ணின் கணவர் குற்றம் சாட்டினார் 20 வயதுடைய […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து ஆலைக்கு அரசு நிதி: டாடா ஸ்டீல் பேச்சு

  • September 3, 2023
  • 0 Comments

டாடா ஸ்டீல் தனது இரும்பு உருக்காலைக்காக பிரித்தானிய அரசிடம் இருந்து சுமார் 50 கோடி பவுண்டுகள் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாடா ஸ்டீல், இங்கிலாந்தின் சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் டால்போட்டில் இரும்பு உருக்கும் இயந்திரத்தை இயக்குகிறது. இதில் சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆலையின் இயந்திரங்களை பெரிய அளவில் மாற்ற வேண்டிய நிலைக்கு […]

இலங்கை செய்தி

ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார்

  • September 3, 2023
  • 0 Comments

இலங்கை தேசிய கிரிக்கட் அணி மீதான அரசியல் அழுத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை வந்துள்ள ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி மீதான அரசியல் அழுத்தத்தை ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஜெய் ஷா […]

ஐரோப்பா செய்தி

மின்-சிகரெட்டுகளை பிரான்ஸ் விரைவில் தடை செய்யும் – பிரதமர் எலிசபெத்

  • September 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், தேசிய புகைபிடித்தலுக்கு எதிரான திட்டத்தின் ஒரு பகுதியாக, தூக்கி எறியும் வேப்ஸ் விரைவில் நாட்டில் தடை செய்யப்படும் என்று கூறினார். வானொலியில் பேசிய போர்ன், தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்று கூறவில்லை. நாட்டில் ஆண்டுக்கு 75,000 பேர் உயிரிழக்கக் காரணமான புகைப்பிடிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்று அவர் கூறினார். இது ஒருமுறை தூக்கி எறியக்கூடிய வேப்ஸ் மீதான தடையை உள்ளடக்கும், இது “இளைஞர்களுக்கு […]

இலங்கை செய்தி

தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது! சஜித்

  • September 3, 2023
  • 0 Comments

தான் உயிருடன் இருந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிரிந்தி ஓயாவில் இன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என சிலர் மேற்கொள்ளும் பிரசாரத்தினால் தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். கிரிந்தியோயா இயக்கத்தின் தெற்கு கால்வாய் அபிவிருத்தி வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் […]