இலங்கை

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதல்

  • September 10, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர், தாய் மற்றும் மகள் மீது வாள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பெண் ஒருவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 10, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சிரியாவிற்கு ஆதரவாக இயங்கிய பெண் ஒருவர் தண்டனைக்குள்ளாகியுள்ளார். குறித்த பெண் ஜெர்மனியில் இருந்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிக்கு 2015,2016 ஆம் ஆண்டு சென்றார். அதன் பின்னர் அங்கே பல வன்கொடுமைகளில் ஈடுப்பட்ட பெண் ஒருவருக்கு கடூழியசிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் செலர் என்று சொல்லப்படுகின்ற உயர் நீதிமன்றமானது குறித்த பெண்ணுக்கு 8 வருடம் 6 மாதம் கடூழிய சிறை தண்டனை விதித்து இருக்கின்றது. அதாவது இவ்வாறு ஜெர்மன் நாட்டில் இருந்து சிரியாவிற்கு சென்ற 31 வயதுடைய […]

இலங்கை

திருகோணமலையில் திடீரென தோன்றிய பிள்ளையார் சிலையால் சர்ச்சை

  • September 10, 2023
  • 0 Comments

திருகோணமலை மொறவெவ பகுதியில் இன நல்லுறவினை கெடுக்கும் நோக்குடன் இனம் தெரியாதோரால் பன்குளம் 4ம் கண்டம் பிரதான வீதியின் அருகில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை அப்பகுதி மக்கள் இது பற்றி மொரவெவ- பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்ததை அடுத்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் மரத்திற்கு கீழ் புத்தர் சிலை மற்றும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம மக்களினால் குறித்த […]

இலங்கை

முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் இலங்கை!

  • September 10, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து அரசாங்க கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்குள் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள DigiEcon 2030 இன் திட்டப் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றுநோய்க்குப் பின்னர், இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இதுவே இந்த நடவடிக்கையை விரைவுபடுத்துவதற்கான காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது. மேலும், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்தும் வகையில், தேசிய டிஜிட்டல் பொருளாதார […]

ஐரோப்பா

திடீரென மாயமான விளையாட்டு வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம்

  • September 10, 2023
  • 0 Comments

காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் கடந்த மாதம் குரோஷியாவில் காணாமல் போன பல புருண்டி கைப்பந்து வீரர்கள் பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜிய தஞ்சம் மற்றும் இடம்பெயர்வுக்கான பெல்ஜிய மாநில செயலாளர் நிக்கோல் டி மூரின் கூற்றுப்படி, குரோஷியாவின் ரிஜெகா நகரில் 9ஆம் திகதியன்று காணாமல் போன சில இளம் விளையாட்டு வீரர்கள், முன்னாள் காலனித்துவ சக்தியான பெல்ஜியத்தில் புகலிடம் கோரி விண்ணப்பங்களை தாக்கல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI உதவியுடன் ஊடுருவும் சீன – வடகொரிய ஹேக்கர்கள்! எச்சரிக்கும் மைக்ரோசாப்ட்

  • September 10, 2023
  • 0 Comments

புதிய அச்சுறுத்தல் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஊடுருவும் சீன மற்றும் வடகொரிய ஹேக்கர்களால் எழுந்துள்ள பிரச்சினையைடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. “மைக்ரோசாப்ட் த்ரெட் அனாலிசிஸ்” மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் வங்கிகள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றின் கணினி வலைப்பின்னலை ஊடுருவி, தனிப்பட்ட தகவல்கள் திருட்டு முதல் நிதி ஆதாரங்கள் சுரண்டல் வரை சீன ஹேக்கர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன. தற்போது அந்த […]

இலங்கை

சனல் 4 தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவிப்பு

  • September 10, 2023
  • 0 Comments

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் அருட் தந்தை ஜூட் கிறிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையிலேயே நடந்த துப்பாக்கிச் சூடு

  • September 10, 2023
  • 0 Comments

இரத்மலானை – ரயில் நிலைய வீதி பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென தெரியவந்துள்ளது. வாகனங்களில் பிரவேசித்த இனந்தெரியாத சிலர், வீடொன்றிலிருந்த குறித்த நபர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ரஷ்யாவுக்காகப் போரிட கியூபாவிலிருந்து ஆட்கடத்தல்

  • September 10, 2023
  • 0 Comments

உக்ரேன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட கியூபா மக்களைக் கடத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை ஈடுபடும் கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. போரில் ரஷ்யப் படைகளில் சேர்ந்துகொள்ளுமாறு கியூபர்களை ஈர்க்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபட்டது. கும்பலை உடைத்து செயலிழக்கச் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அறிக்கையில் வெளியுறவு அமைச்சு அதிகத் தகவல்களை வெளியிடவில்லை. ஆட்கடத்தல் கும்பல் கியூபா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இரு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அச்சுறுத்தும் புதிய ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • September 10, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லிஸ்டீரியா நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 25 லிஸ்டீரியா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கர்ப்பிணித் தாய்மார்கள், நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அவர்களில், நீரிழிவு இதய-கல்லீரல் அல்லது சிறுநீரக நோயாளிகளுக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும். உண்ணும் உணவோடு தொடர்புடைய பாக்டீரியா தொற்றுதான் இந்த நோய்க்கு மூலகாரணமாக இருப்பதுடன், தனிநபர்களின் […]