ஐரோப்பா

சுவிஸில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு!

  • December 11, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் சியோன் நகரில் இன்று (11.12)  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 35,000 பேர் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை  Valais கன்டோனில் உள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரிப்பு : திரளாக ஒன்றுக்கூடிய மக்கள்!

  • December 11, 2023
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து அதிகரித்து வரும் யூத எதிர்ப்புக்கு எதிராக நேற்று (10.12) ஆயிரக்கணக்கான மக்கள் பெல்ஜியம் மற்றும் ஜேர்மன் தலைநகரங்களில் பேரணி நடத்தினர். இதற்கு முன்பு பாரிஸ் மற்றும் லண்டனில் நடந்த அணிவகுப்புகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த நிலையில், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினிலும் போராட்டங்கள் வெடித்தன. குறைந்தது 4,000 பேர் இந்த பேரணிகளில் கலந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் யூத எதிர்ப்பு […]

பொழுதுபோக்கு

ரிலீஸ் ஆன பத்தே நாளில் ஜெயிலர் மற்றும் லியோ பட லைஃப் டைம் வசூல் சாதனையை துவம்சம் செய்த அனிமல்

  • December 11, 2023
  • 0 Comments

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் லியோ மற்றும் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடித்து உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது இந்தி படங்கள் தான். இந்த வருடம் ரிலீஸ் ஆன பான் இந்தியா படங்களில் அதிக வசூலை குவித்து முதல் இரண்டு இடங்களை தட்டிச் […]

ஆசியா

சீனாவில் குழந்தைகளிடையே பரவும் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

  • December 11, 2023
  • 0 Comments

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களில் “ஏற்ற ஏற்ற இறக்கம்” காணப்படுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ வசதிகளில் வழக்குகளின் எண்ணிக்கை சமீபத்தில் குறைந்துள்ளது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மி ஃபெங் பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார். குழந்தைகளிடையே பரவும் நிமோனியா நோய் நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனம் பெய்ஜிங்கிடம் அறிக்கை கோரியது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த சீனா, நன்கு அறியப்பட்ட நோய் கிருமிகளிடம் […]

ஐரோப்பா

கீவ் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

  • December 11, 2023
  • 0 Comments

கீவ் மீது இன்று (11.12) காலை ரஷ்யா நடத்திய தாக்குதல்களை் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. உக்ரைனின் அறிவிப்பின்படி ரஷ்யா 08 வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகவும், அந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி (0200 GMT) அதிகாலை 4:00 மணிக்கு “ரஷ்ய படையெடுப்பாளர்கள் கிய்வ் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 75 ஷாஹெட் ட்ரோன்களை ரஷ்யா ஏவியது என்றும் அவற்றில் 74 வான் பாதுகாப்புகளால் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

புதிய குடியேறிகளுக்கு எதிரான மனோநிலையை கொண்டுள்ள கனேடியர்கள்!

  • December 11, 2023
  • 0 Comments

அதிகளவிலான குடியேற்றம் தொடர்பில் கனடேயர்கள் மத்தியில் தீர்க்கமான நிலை உருவாகியுள்ள நிலையில், பொருளாதார பிரச்சினைகள் சுமூகநிலையை அடைந்தவுடன் அந்த மனநிலையில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி, வீட்டு வசதி சிக்கல்கள் மற்றும் உடல்நலம் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மீதான அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் குடியேற்றம் குறித்த கருத்துக்களில் சமீபத்திய மாதங்களில் பல கருத்துக் கணிப்புகள் உணரக்கூடிய மாற்றத்தைக் காட்டியுள்ளன. சமீபத்திய கருத்துக்கணிப்பில், Abacus Data என்ற ஏஜென்சி, பதிலளித்தவர்களில் 67% பேர் […]

இலங்கை

இலங்கையில் உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • December 11, 2023
  • 0 Comments

அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. முட்டை, இறைச்சி, மீன், சீனி மற்றும் கீரி சம்பா அரிசி போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உணவு விலைகள் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என […]

ஐரோப்பா

இத்தாலியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு ரயில்கள் – 17 பயணிகள் படுகாயம்

  • December 11, 2023
  • 0 Comments

இத்தாலியில் நேற்று இரவு இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு இத்தாலியின் பாயின்சா – ஃபோர்லின் நகரங்களுக்கு இடையே நேற்று இரவு அதிவேக ரயிலும், பிராந்திய ரயிலும் நேருக்கு மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 17 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினரும், ரயில்வே துறையினரும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு ரயில் சேவையை இயக்கும் ட்ரெனிட்டாலியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ரயில்கள் மிகவும் மெதுவாக வந்து […]

பொழுதுபோக்கு

சோசியல் மீடியாவில் வைரலானது தளபதியின் அம்மா ஷோபாவின் வீடியோ

  • December 11, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் பாடகி சோபாவின் மகன் விஜய் என்கின்ற நிலை மாறி, இன்று தளபதி விஜய் அவர்களின் அம்மா சோபா சந்திரசேகர் என்ற நிலை வந்துள்ளது. இதைவிட ஒரு தாய்க்கு மிகச்சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது. பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுடைய மனைவி தான் பாடகியும், இயக்குனரும், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகர். கடந்த 1967வது ஆண்டு முதல் பல திரைப்படங்களில் பாடகியாக வளம் வந்தவர் தான் அவர். தளபதி விஜய் அவர்களுடன் […]

மத்திய கிழக்கு

டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து தாக்குதல் நடத்தும் ஹமாஸ் – இஸ்ரேல் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

  • December 11, 2023
  • 0 Comments

டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி 2 மாதங்களுக்கு மேலாகிறது. போரை ஆரம்பித்தது ஹமாஸ் என்றாலும் தற்போது இஸ்ரேல் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் துன்பப்படுகிறார்கள்.இதுவரை காஸாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது போரின் […]