உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க தயாராகும் ஹூதிகள்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் Houthis, தெரிவித்துள்ளனர்.

தகுந்த நேரத்தில் ராணுவ ரீதியாகக் களமிறங்க தாங்கள் முழு வீச்சுடன் காத்திருப்பதாக ஹூதி அமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் தற்போதைய மோதல்களில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே, தாங்கள் நேரடியாகத் தலையிட வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய போர்முனையைத் திறக்க ஹூதி கிளர்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி ஆகிய அமைப்புகள் ஈரான் ஆதரவுடன் இயங்கும் அமைப்புகளெனக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி