பொழுதுபோக்கு

அஜித் குமார் டிஸ்சார்ஜ்.. தற்போதைய நிலை என்ன?

  • May 1, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன், அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய அஜித் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

இஸ்ரேலில் ஆபத்தாக மாறும் காட்டுத் தீ – தேசிய அவசரகால நிலை பிரகடனம்

  • May 1, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் ஆபத்தாக மாறும் காட்டுத் தீ காரணமாக தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளின் பின் இஸ்ரேலில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாழ்வியல்

தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

  • May 1, 2025
  • 0 Comments

சிறு வயதில் நாம் தேங்காயை பல்லால் கடித்தோ, உடைத்தோ பச்சையாக சாப்பிடுவோம். கொலஸ்டிரால், மயக்கம் என எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை‌. நவீன சமையலில் தேங்காயை தவிர்க்க ஆரம்பித்ததிலிருந்து அதன் நன்மைகளை பெற முடியாமல் வியாதிகளை ஏற்படுத்தி கொள்கிறோம். தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. சமைக்கும் போதுதான் அது கொழுப்பாக மாறுகிறது. உடைத்த அரை மணி நேரத்தில் பச்சையாக சாப்பிடுவதால், அது சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை […]

ஆசியா

தேர்தலுக்கு தயாராகும் 30 லட்சம் சிங்கப்பூர் மக்கள்

  • May 1, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் நாளை மறுநாள் 3ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுமார் 30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு 63 சதவீதம் பேரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 15 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். 1959-ஆம் ஆண்டு […]

உலகம்

அடுத்த போப் ஆண்டவராக தன்னை தானே தெரிவு செய்துக் கொண்ட டிரம்ப்

  • May 1, 2025
  • 0 Comments

அடுத்த போப் ஆண்டவர் நான் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசிய டிரம்ப் கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், “நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார். மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஷார்ட்ஸில் 5 புதிய அம்சங்கள்

  • May 1, 2025
  • 0 Comments

யூடியூப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி ஷார்ட்ஸ்-ஐ மேம்படுத்தி வருகிறது. இது படைப்பாளர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஷார்ட்ஸ் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறது. சமூக ஊடக பயனர்களின் கவனச்சிதறல் தொடர்ந்து குறைந்து வருவதால், யூடியூப் முன்னணியில் இருக்க புதுமையை அறிமுகப்படுத்துகிறது. இதில் கூகிள்டீப் மைண்ட் உருவாக்கிய புதிய AI- இயங்கும் கருவிகளும் அடங்கும். இந்த AI கருவிகள் படைப்பாளர்களுக்கு தங்கள் உள்ளடக்கத்திற்கு ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை சேர்த்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்த புதிய வழிகளைத் திறக்கும். […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்களை வெளியேற்ற நடவடிக்கை

  • May 1, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள எஸ்தாவோல் காட்டில் ஒரு பெரிய புதர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலிய அதிகாரிகள் அங்குள்ள மக்களை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து டெல் அவிவ்-ஜெருசலேம் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால், சாலையை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைநகர் டெல் அவிவிற்கு மேற்கே உள்ள இந்த மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஒரு வாரத்தில் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவது இது இரண்டாவது […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதியின் மே தினச் செய்தி

  • May 1, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மே தின செய்தியை வெளியிட்டுள்ளார். ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கச் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இந்தியா

பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய இந்தியா

  • May 1, 2025
  • 0 Comments

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு கடந்த 24 ஆம் திகதி மூடியது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்த நிலைமை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, அது இப்போது போர் நிலைக்கு அதிகரித்துள்ளது. இந்தியப் பிரதமர் […]

விளையாட்டு

முதல் அணியாக வெளியேறியது சென்னை.! தோல்விக்கு காரணம் கூறிய தோனி

  • May 1, 2025
  • 0 Comments

நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால்,சென்னை அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதில், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் ஆக, வெற்றி […]