ஐரோப்பா செய்தி

ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பதவி விலகல்

  • September 20, 2025
  • 0 Comments

ஸ்காட்லாந்தின் எதிர்க்கட்சி தலைவரான கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் ரோஸை உடல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜேமி ஹெப்பர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடற்புறாக்கள் குறித்து டக்ளஸ் ரோஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜேமி ஹெப்பர்ன் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் டக்ளஸ் ரோஸ் பிரதமர் ஜான் ஸ்வின்னிக்கு புகார் அளித்துள்ளார். குறித்த புகாரில், அமைச்சர் தன்னை “உடல் ரீதியான தாக்குதல் மற்றும் […]

இலங்கை செய்தி

பண்டாரநாயக்க விமான நிலையத்தின் குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட 16.8 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்

  • September 20, 2025
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஆண்கள் குளியலறையில் ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளில் 422 கிராம் குஷ் கஞ்சா மற்றும் 1.262 கிலோகிராம் ஹஷிஷ் ஆகியவை அடங்கும், இதன் தெரு மதிப்பு சுமார் 16,840,000 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ஒரு பையை கவனித்த ஒரு துப்புரவு ஊழியர் உடனடியாக விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த வழக்கு விமான நிலையத்துடன் இணைக்கப்பட்ட […]

உலகம் செய்தி

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுடன் இணைந்த பிரேசில்

  • September 20, 2025
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் “இனப்படுகொலை” செய்வதாக தென்னாப்பிரிக்கா தொடுத்த வழக்கில் தற்போது பிரேசில் முறையாக இணைந்துள்ளது. ஹேக் நீதிமன்றம் ஒரு அறிக்கையில், பிரேசில் சர்வதேச நீதிமன்ற சட்டத்தின் 63வது பிரிவைப் பயன்படுத்தி, இந்த வழக்கில் தலையீடு செய்வதற்கான அறிவிப்பை தாக்கல் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளது. முதல் முறையாக டிசம்பர் 29, 2023 அன்று, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் தொடர்பாக இனப்படுகொலை சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளைத் தொடங்க தென்னாப்பிரிக்கா ஒரு விண்ணப்பத்தை […]

ஆசியா

சவுதியில் நான்கு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு

  • September 20, 2025
  • 0 Comments

சவுதி வரி மற்றும் சுங்க ஆணையம் 261,000க்கும் மேற்பட்ட ஆம்பெடமைன் போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 9.8 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் சம்பந்தப்பட்ட நான்கு கடத்தல் முயற்சிகளை முறியடித்ததாக தெரிவித்துள்ளது. ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம், துபா துறைமுகம் மற்றும் அல்-பாதா எல்லைக் கடவையில் இந்த பறிமுதல்கள் செய்யப்பட்டன. முதல் முயற்சியில், துபா துறைமுகத்தில் உள்ள ஆய்வாளர்கள் மர மேசைகளின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 50,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கண்டுபிடித்தனர். இரண்டாவது முயற்சியில், ஜெட்டா […]

செய்தி விளையாட்டு

Asia Cup – இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அதிரடி வெற்றி

  • September 20, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தசுன் ஷனகா […]

ஐரோப்பா செய்தி

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்த ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தம்பதியினர்

  • September 20, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட எட்டு மாத தடுப்புக்காவலுக்குப் பிறகு தலிபான் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் பிரித்தானியா வந்தடைந்துள்ளனர். 80 வயதான பீட்டர் ரெனால்ட்ஸ் மற்றும் அவரது 77 வயது மனைவி பார்பி வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக தங்கியிருந்த கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து விமானத்தில் வந்தனர். அவர்களின் உடல்நலம் குறித்த அச்சங்கள் அதிகரித்த பின்னர் தம்பதியினரை தலிபான் விடுவித்தது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய தம்பதியினருடன் அவர்களின் மகள் சாரா என்ட்விஸ்டில் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிசார் மோதல்

  • September 20, 2025
  • 0 Comments

நெதர்லாந்தின் ஹேக்கில் நடந்த குடியேற்ற எதிர்ப்புப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க டச்சு காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நீர் பீரங்கியையையும் பயன்படுத்தியதாக உள்ளூர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். தேசியத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் புகலிடம் கோருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலதுசாரி ஆர்வலர் ஒருவர் ஏற்பாடு செய்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஏராளமான போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் வன்முறையில் மோதினர், கற்கள் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் ரசாயன கடத்தலில் ஈடுபட்ட சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை

  • September 20, 2025
  • 0 Comments

போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை கடத்தியதற்காக சீன நிறுவன அதிகாரிகள் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. வுஹானை தளமாகக் கொண்ட அமர்வெல் பயோடெக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி கிங்ஜோ வாங் மற்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மேலாளர் யியி சென் ஆகியோர் பிப்ரவரியில் நியூயார்க்கில் ரசாயன இறக்குமதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். மாவட்ட நீதிபதி பால் கார்டெஃப், வாங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சென்னுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். ஜூன் 2023ல், […]

ஆசியா செய்தி

சிறையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி சித்திரவதை செய்வதாக இம்ரான் கான் குற்றச்சாட்டு

  • September 20, 2025
  • 0 Comments

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், சிறையில் தன்னையும் தனது மனைவியையும் மன ரீதியாக சித்திரவதை செய்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். 72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான், பல வழக்குகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-காதிர் டிரஸ்ட் வழக்குகளில் இருவரும் தண்டிக்கப்பட்ட பிறகு, அவரது மனைவி புஷ்ரா பிபியும் அவருடன் சிறையில் […]

இந்தியா செய்தி

டெல்லியில் 100க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • September 20, 2025
  • 0 Comments

டெல்லியில் கடந்த சில நாட்களாக பல பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் சோதனை நடத்திய போது மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்றும் பல பாடசாலைகளுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிபிஎஸ் துவாரகா, கிருஷ்ணா மாடல் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒரே நேரத்தில் பல பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர். தகவலறிந்த […]