இலங்கை

கொழும்பில் இருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • October 7, 2025
  • 0 Comments

கொழும்பிலிருந்து இன்று(07) சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது. விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா […]

இலங்கை

தம்புள்ளையில் இரசாயணப் பொருளை உட்கொண்ட மாணவர்கள் – 07 பேர் வைத்தியசாலையில்!

  • October 7, 2025
  • 0 Comments

தம்புள்ளையில் உள்ள ஒரு பாடசாலையின் ஆய்வகத்தில் இரசாயனப் பொருளை உட்கொண்ட  07 குழந்தைகள் உடல்நலக்குறைவுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் சிறுவர்கள், இரண்டு பேர் சிறுமிகள் எனக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளில் பாடசாலையின் ஆய்வகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆய்வகத்தின் தரையில் சிதறிக்கிடந்த சிவப்பு நிறப் பொருள் மிளகாய்த் தூள் என்று குழந்தைகள் தவறாகக் கருதி அதை உட்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குறித்த பொருள் […]

இலங்கை

இலங்கையில் இரண்டு நாட்களில் 8000 ரூபாவால் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • October 7, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமைக்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரப்படி கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் “22 காரட்” ஒரு பவுண்டு தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, இது 283,000 ரூபாவாகக் காணப்பட்டது. இதற்கிடையில், சனிக்கிழமை 306,000 ரூபாவாக இருந்த “24 காரட்” ஒரு […]

இந்தியா

தெலுங்கானாவில் பண்ணை வீட்டில் போதை விருந்து; 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் கைது

  • October 7, 2025
  • 0 Comments

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மொய்னாபாத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் போதை விருந்து(Rave party)  நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு 22 சிறுவர்கள் உட்பட 65 பேர் போதையில் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மொத்தமாக வந்தவர்களில் 12 பேர் பெண்கள், அவர்களில் ஐந்து பேர் சிறுமிகள். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் இருவர் கஞ்சா புகைத்திருந்தது தெரியவந்தது. மற்றவர்கள் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

லண்டனில் இடம்பெறும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது – பிரித்தானிய பிரதமர்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று  நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தியுள்ளார். மான்செஸ்டர் (Manchester) தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்  அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், யூத சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு நாளான இன்று லண்டனைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டு அணிவகுப்பை நடத்த […]

தென் அமெரிக்கா

ஈகுவடாரில் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம்; 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

  • October 7, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது. அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி டேனியல் நோபோவா அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர். […]

தமிழ்நாடு

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதியான விசாரணைக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய த.வெ.க!

  • October 7, 2025
  • 0 Comments

கரூர் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. விசாரணைகளை முன்னெடுத்த நீதிமன்றம் தமிழக வெற்றிக்கழகத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதுடன், பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்து சிசிரிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் பல குறைகள் இருப்பதாக தமிழ் நாட்டு […]

இலங்கை

ஹுங்கமவில் நடந்த கொடூரமான இரட்டைக் கொலையின் முக்கிய சந்தேக நபர் உட்பட மூவர் கைது

  • October 7, 2025
  • 0 Comments

ஹுங்கம, வடிகலாவில் தம்பதியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஒரு முக்கிய சந்தேக நபர் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (07) காலை கைது செய்யப்பட்டதாக ஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர். “அண்டுபெலன பிந்து” என்று அழைக்கப்படும் இந்த கொலையின் முக்கிய சந்தேக நபர், அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரட்டைக் கொலை இன்று (07) அதிகாலை 12:45 மணியளவில் நடந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, பெண் […]

பொழுதுபோக்கு

பராசக்திக்கு இன்னும் 100 நாட்கள்…

  • October 7, 2025
  • 0 Comments

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம்தான் பராசக்தி. இதுவரை ஹீரோவாக நடித்த ரவி மோகன் இந்த படத்தில் முதன்முறையாக வில்லனாக மிரட்ட உள்ளார். இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்தாண்டு  ஜனவரி 14-இல் இப்படம் திரைக்கு வர இருக்கின்றது. படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக நேற்று போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொழுதுபோக்கு

புதிய பட அறிவிப்புக்குப் பின் சிம்பு சென்ற இடம் எது தெரியுமா?

  • October 7, 2025
  • 0 Comments

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் வேலையாக கோவிலுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதையடுத்து, வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் இன்று காலை தியானத்திலும் ஈடுபட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் “அரசன்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி தாணு தனது டுவிட்டர் தளத்தில் நேற்று வெளியிட்டார். ஒரு காலக்கட்டத்தில் கொடிகட்டிப்பறந்த சிம்பு இடைப்பட்ட காலங்களில் காணாமல் போயிருந்தார். படங்கள் இன்றி, உடல் பருமனாகி பறிதாபமான நிலையில் இருந்தார். […]