இலங்கை

இலங்கையின் பொருளாதார செயல்திறன் வலுவாக உள்ளது – உலக வங்கி!

  • October 7, 2025
  • 0 Comments

இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது. இன்று (07) வெளியிடப்பட்ட சமீபத்திய இலங்கை மேம்பாட்டு புதுப்பிப்பு அறிக்கையில்  இலங்கையின் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டில் 4.6% வளர்ச்சியடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இருப்பினும், இது 2026 ஆம் ஆண்டில் 3.5% ஆகக் குறையக்கூடும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சி முழுமையடையாமல் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விடக் குறைவாக இருப்பதாகவும் உலக […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் பறவை காய்ச்சல் அபாயம் – 71000 கோழிகளை கொல்ல நடவடிக்கை!

  • October 7, 2025
  • 0 Comments

நெதர்லாந்தில் பறவை காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில் 71,000 கோழிகளை கொல்ல உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு நெதர்லாந்தில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு கோழிகள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பண்ணையிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவில் ஆறு கோழிப் பண்ணைகள் அமைந்துள்ளன. நெதர்லாந்து உணவு மற்றும் நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணையம் (NVWA) அவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரித்துள்ளது. 10 கிலோமீட்டர் சுற்றளவில் […]

உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 7, 2025
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் இன்று ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக  ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுநர்கள் தங்களின் சாரதி அனுமதி பத்திரத்தை புதிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் சாரதி அனுமதி பத்திரத்தின் காலாவதி திகதியை அவதானித்து ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய  http://gov.uk/renewdrivinglicence என்ற இணையத்தளத்தின் ஊடாக இதனை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாரதி அனுமதி பத்திரம் காலாவதியாகியிருந்தாலோ, அல்லது தங்களிடம் அனுமதி பத்திரம் இல்லையென்றாலோ விபத்துக்கான காப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   https://x.com/DVLAgovuk/status/1975191898235998372

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கும்முனு இருக்கும் நிதி அகர்வாலின் கிளாமர் போட்டோஸ்…

  • October 7, 2025
  • 0 Comments

பூமி, ஈஸ்வரன் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் கிளாமரை அள்ளி வீசியுள்ளார். எந்த ஆடையில் பார்த்தாலும் இவர் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து, தமது ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.    

பொழுதுபோக்கு

5 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்த ‘இட்லி கடை’

  • October 7, 2025
  • 0 Comments

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த படம் “இட்லி கடை”. கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலிலும் கலக்கி வருகின்றது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி கடந்த 5 நாட்களில் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரமும் பெரிய படங்கள் இல்லாததால் வசூல் குறைய வாய்ப்பில்லை. […]

ஐரோப்பா

பிரான்ஸில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்- பற்றி எரிந்த வேன்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர்  இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]

உலகம்

குவாண்டம் இயக்கவியலில் பணியாற்றியதற்காக மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

  • October 7, 2025
  • 0 Comments

இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (7) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளுக்கான பரிசுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.

பொழுதுபோக்கு

மாஸ் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய அவதாரம்

  • October 7, 2025
  • 0 Comments

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஐதராபாத் நகரில் ஆர்.டி.சி எக்ஸ் ரோடில் எ.எம்.பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை திறக்க உள்ளார். மொத்தம் 7 அரங்கங்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது. இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏ.எம்.பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ்  திரையரங்கத்தை திறந்திருந்தார். தற்போது மற்றுமொரு மல்டிபிளக்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளார். மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் […]

இலங்கை

கொழும்பில் இருந்து சென்னை சென்ற ஏர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • October 7, 2025
  • 0 Comments

கொழும்பிலிருந்து இன்று(07) சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பறவை மோதியதை அடுத்து விமானம் திருப்பி விடப்பட்டது. விமானத்தில் 158 பயணிகள் இருந்தனர் எனவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் உடனடியாக ஆய்வுக்காக தரையிறக்கப்பட்டது. பின்னர் பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியா […]