இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு முதல் எலிக் காய்ச்சல் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 21,963 என்றும், 2024 ஆம் ஆண்டில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 286 […]













