ஐரோப்பா செய்தி

ஹன்டா வைரஸ் – அச்சமடையத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 

அட்லாண்டிக் கடலில் சொகுசுக் கப்பலொன்றில் ஹன்டா வைரஸ் (Hantavirus) பரவியதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

சுமார் 150 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த எம்.வி. ஹோண்டியஸ் (MV Hondius) என்ற கப்பல் தற்போது கேப் வெர்டே (Cape Verde) கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளது.

கப்பலில் உள்ள பயணிகள் மற்றும் குழுவினர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாகவே உள்ளதென ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் ஹான்ஸ் க்ளூஜ் (Hans Kluge) தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலைமையை கையாள உலக சுகாதார அமைப்பு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹன்டா வைரஸ் தொற்றுகள், மிகவும் அரிதானவை என்றும், பொதுவாக பாதிக்கப்பட்ட எலிகள் போன்ற கொறித்துண்ணிகளுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே ஏற்படும் என்றும், மனிதர்களிடையே எளிதில் பரவாது என்றும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!