உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம்( ADNOC ) அட்னாக்குடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தச் சம்பவம், சர்வதேச கடல் போக்குவரத்து சுதந்திரத்தை மீறுகிறது என்றும் ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சுமத்தியுள்ளது.

வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது

மேலும், ஹோர்முஸ் நீர்வழியை அழுத்தம் அல்லது மிரட்டலுக்கான கருவியாக பயன்படுத்துவது பிராந்திய அமைதிக்கும் உலக எரிசக்தி பாதுகாப்புக்கும் ஆபத்தாகும் எனவும் எச்சரித்துள்ளது.

இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, ஹோர்முஸ் நீர்வழியை முழுமையாக திறக்க வேண்டும் எனவும் ஈரானை ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!