இலங்கை செய்தி

இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் பிரகாரம் 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

இதேவேளை, இலங்கை மண்ணெண்ணெய்யின் விலையும் 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.

இதேவேளை, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாகும்.

அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ரகத்தின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 340 ரூபாவாகும்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை