வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய வெள்ளம் – 13 பேர் மரணம் – 20க்கும் அதிகமானவர்கள் மாயம்

Members of Task Force 1 deploy boats along the Guadalupe River in the wake of a destructive flooding event in Kerrville on Friday July 4, 2025. (Christopher Lee/The San Antonio Express-News via AP)

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் காரணமாக 13 பேர் உயிரிந்துள்ளதுடன் 20க்கும் அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

கோடை விடுமுறை முகாம்கள் நிறைந்த டெக்சஸ் ஹில் பகுதியில் சில மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை முக்கால் மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.

குவாடலுப்பே ஆற்றின் நீர்மட்டம் 26 அடி உயர்ந்ததால் மோசமான வெள்ளம் ஏற்பட்டது என டெக்சஸ் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

ஆற்றோரத்தில் இருந்த Camp Mystic கோடை விடுமுறை முகாமில் சுமார் 700 பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் 23 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

பிள்ளைகளின் நிலை அறியாத குடும்பத்தார் சமூக ஊடகத்தில் பதற்றத்தைப் பதிவிட்டுள்ளனர். கோடை விடுமுறை முகாமிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பிள்ளையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று முகாமின் நிர்வாகம் கூறியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில் வேகமான நீரோட்டத்தில் பிள்ளைகளைத் தேட அதிகாரிகள் போராடுகின்றனர். ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்