செய்தி தமிழ்நாடு

எல்லோருக்கும் எல்லாம் – சமத்துவ பொங்கல் நிகழ்வில் ஸ்டாலின் கருத்து

எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்டாலின்,

”எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது.

அதற்காக கடினமாக அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த திராவிட மாடல் அரசுக்காக அரசு பணியாளர்கள் நேரம் காலமின்றி கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பணியாளர்களுடன் இன்றை தினம் சமத்துவ பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி