இலங்கை

சிறுவர்கள் குற்றச்செயலில், ஈடுபடுவதையோ, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதையோ ஊடகம் முன் பகிரங்கப்படுத்தக் கூடாது என வலியுறுத்தல்!

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவதால் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும், எனவே அதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் எம்.பி ரோஹினி குமாரி விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சிறுவர்களுக்கான பாராளுமன்ற பேரவையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இதன்படி  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின்  அடையாளங்களை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணருவது சம்பந்தப்பட்ட சிறுவர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அவர்களை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக  அடுத்த கூட்டத்திற்கு அனைத்து ஊடக நிறுவனங்களையும் அழைத்து இது பற்றி மேலும் விவாதிக்க வேண்டும் என்று கௌசிஸ் உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்