வெனிசுலாவில் அவசரநிலை அறிவிப்பு
வெனிசுலாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரித்துள்ளதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட ஒரு உயர்மட்டப் பணிக்குழுவை நியமித்துள்ளார்.
மக்களுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டின் பொது மற்றும் தனியார் சுகாதார வலையமைப்பு முழுவதையும் தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




