இலங்கை செய்தி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: உத்தியோகபூர்வ முடிவுகள்

இன்று நடைபெற்று முடிந்த எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விசேட செய்தியாளர் சந்திப்பில் காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி இந்த முடிவுகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 வாக்குகளை பெற்று 15 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று, 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூவாயிரத்து 597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சை குழு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2,568.

அதன்படி, சுயேச்சை குழு, 2 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி ஆயிரத்து 350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை தமதாக்கிகொண்டது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது. (a)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை