ஜெர்மன் நாடாளுமன்றத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்?
ஜெர்மன் நாடாளுமன்றம் (புண்டெஸ்டாக்) மற்றும் பிற அரசியலமைப்பு நிறுவனங்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரின்ட் (lexander Dobrindt) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நடாளுமன்ற தலைவர் ஜூலியா க்ளோக்னருக்கு (Julia Klöckner) அவசர கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முக்கிய அரசு நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு நிரந்தர ஆளில்லா விமான எதிர்ப்புத் திறனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
“தற்போதைய அச்சுறுத்தலான சூழலைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு அமைப்புகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது,” என்று வலியுறுத்திய அவர், சமீபத்திய மாதங்களில் ஆளில்லா விமானங்கள் தென்படுவது அதிகரித்து வருவதையும், இது பாதுகாப்பு அதிகாரிகளிடையே கவலைகளை அதிகப்படுத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பா முழுவதும் ட்ரோன் தொடர்பான சம்பவங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





