ஐரோப்பா

பிரித்தானியாவில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போதைய வானிலை நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான உகந்த சூழலை அளிப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற நோய்களைப் பரப்பும் நுளம்புகள் வேகமாக அதிகரிப்பதாக லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பாடசாலையைச்  சேர்ந்த டாக்டர் மொஜ்கா கிறிஸ்டன் (Mojca Kristan) தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் பரவும் டெங்கு நுளம்புகள் ஐரோப்பாவில் இல்லை என்றாலும் தற்போது அதன் முட்டைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2060-களில் டெங்கு லண்டனில் ஒரு உள்ளூர் நோயாக மாறக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை உயர்வால், சமீபத்திய ஜூன் மாத மழையானது கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்குப் போதுமான இடங்களை வழங்கியுள்ளதால், சுற்றுச் சூழலை பாதுகாப்பாக வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்