பொழுதுபோக்கு

ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்க இடைக்கால தடை

‘பொன்னியின் செல்வன் 1, 2’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றது, விருதுகளையும் பெற்றது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ என்ற பாடல் காப்புரிமை பிரச்சினையில் சிக்கியது. பாலிவுட் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், வீரா ராஜ வீரா பாடல், தனது தாத்தா நசீர் பயாசுதீன் தாகர் மற்றும் தந்தை ஜாஹிருதீன் தாகர் ஆகியோரால் 1970ல் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ என்ற பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது’ என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் பாடலின் மூலப்பதிவை ஏ.ஆர்.ரஹ்மான் கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். அதை கேட்ட நீதிபதிகள், வரிகள் தனித்தனியாக இருந்தாலும் ராகம் ஒன்றுதான் எனவே காப்புரிமை சட்டப்படி ஏ.ஆர்.ரஹ்மான், பயாஸ் வாசிபுதீன் தாகர் தரப்புக்கு 2 கோடி வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி கொடுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்