ஐரோப்பா

லோர்ட் மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வெளியீடு!

அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக லோர்ட் மாண்டல்சன் ( Lord Mandelson) பணியாற்றிய காலம் தொடர்பான இரண்டாவது தொகுதி ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டன.

அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மொதமாக 1500 இற்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய கோப்புகளில், லார்ட் மாண்டல்சனுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையேயான 160 பக்கங்களுக்கும் மேற்பட்ட செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், தனது தனிப்பட்ட தொலைபேசியை ஒப்படைக்குமாறு அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்ததால், அந்தத் தகவல்கள் இந்த வெளியீட்டில் சேர்க்கப்படவில்லை.

அதேநேரம் அவரது பதவி நியமனம் தொடர்பான சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!