இலங்கை

நல்லூரில் கோர விபத்து – சாரதி வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று வர்த்தகம் நிலையம் ஒன்றின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த வர்த்தக நிலைய கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் வர்த்தக நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதத்திற்குள்ளானது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்