ஐரோப்பா

லிதுவேனியாவில் வீட்டில் மோதி விபத்துக்குள்ளான சரக்கு விமானம் : ஒருவர் பலி!

லிதுவேனியாவில் இன்று காலை DHL சரக்கு விமானம் ஒன்று வீடொன்றுடன் மீது  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் (இங்கிலாந்து நேரப்படி அதிகாலை 3.30) விமானம் வில்னியஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு மாடி வீட்டிற்குள் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாட்ரிட்டை தளமாகக் கொண்ட ஒப்பந்ததாரர் ஸ்விஃப்டேர் இயக்கிய சரக்கு விமானம் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக்கில் இருந்து பறந்து கொண்டிருந்ததாக லிதுவேனியன் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட நகர சேவைகள் தளத்தில் இருப்பதாகவும், விபத்துக்கான காரணத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்