இலங்கை செய்தி

பொலிஸ் அதிகாரியின் மகன் ஓட்டிச் சென்ற கார் விபத்து!! ஒருவர் படுகாயம்

கொழும்பு டொரிங்டன் சதுக்கத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஸ்முல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கொழும்பு நெலும்பொகுன அரங்கில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள சுற்று வட்டத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதிய வாகனம் அருகில் இருந்த நீர் குளத்தில் மோதி நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த காரை மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை