ஆசியா முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து பெர்த் நோக்கிச் சென்ற விமானத்தில் பரபரப்பு

சிங்கப்பூரில் இருந்து பெர்த் நோக்கிச் சென்ற ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெளிநாட்டு பயணி ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், மிரட்டல் விடுத்த 30 வயதான ஆஸ்திரேலிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை 4.11 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், 4.55 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பியது. அதாவது அன்று மாலை சுமார் 6.26 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், பாதுகாப்பு சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.

இது போன்ற போலியான தகவல்களை சொல்லி, பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content