ஐரோப்பா

HMS டிராகன் போர்க்கப்பலை மத்தியக் கிழக்கிற்கு அனுப்ப தயாராகும் பிரித்தானியா!

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை தணிந்து அமைதி திரும்பியவுடன் தனது HMS டிராகன் போர்க்கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.

“சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ​​பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் ஒரு பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக, ஜலசந்தியைப் பாதுகாக்க பிரித்தானியா தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர்.

அமெரிக்காவும் ஈரானும் தங்களின் 10 வாரப் போரிலிருந்து படிப்படியாக வெளியேறும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நிலைமை சீரடைந்தவுடன் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் ஒரு திட்டத்தை பிரான்சும் பிரித்தானியாவும் இணைந்து உருவாக்கி வருகின்றன.

இந்த திட்டத்திற்கு ஈரானும் உடன்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை வான் பாதுகாப்பு அழிப்புக் கப்பலான HMS டிராகன், சைப்ரஸைப் பாதுகாக்க உதவுவதற்காக, மத்தியத்தரைக்கடல் பகுதிக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!