வட அமெரிக்கா

டெக்சாஸில் மூளையை தின்னும் அமீபா : 5 நாட்களில் மரணம்!

டெக்சாஸில் 71 வயது மூதாட்டி ஒருவர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழாய் தண்ணீரை பயன்படுத்தி மூக்கில் உள்ள அழுக்கை வெளியேற்ற முயன்றபோது, அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “71 வயது மூதாட்டி கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனைக்கு வந்தார். நாங்கள் முடிந்தவரை அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

அவர் மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் ‘நேக்ளீரியா ஃபவுலரிவால்’ பாதிக்கப்பட்டிருந்தார். இது அரிய மற்றும் கொடுமையான ஒரு செல் உயிரியாகும். இந்த அமீபா ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்கிற மூளை தொற்றை ஏற்படுத்துகிறது. இது மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள ‘மெனிங்கஸ்’ எனப்படும் பாதுகாப்பு உறையில் அழற்சியை ஏற்படுத்துகிறது என கூறியுள்ளனர்.

 

 

 

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்