வட அமெரிக்கா

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகிய ட்ரம்பை வெள்ளை மாளிகைக்கு அழைத்த பைடன்

டொனால்ட் ட்ரம்பை ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவர் அழைத்துள்ளார்.

அத்துடன், இந்த கலந்துரையாடலில் நிர்வாகத்தை மாற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்துவதாக உறுதியளித்தமையானது தொழிற்துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக, நேற்றையதினமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய கடல் காற்று மேம்படுத்தல் நிறுவனமான ஓர்ஸ்டெட் (Orsted) நிறுவனம் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டெனால்ட் ட்ரம்பின் வெற்றியின் பின்னர் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படத்தில் உலக செல்வந்தரான ஈலோன் மஸ்கும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்