இலங்கை

இலங்கையில் விந்தணு வங்கியால் ஏற்பட்ட நன்மை – 10 பெண்கள் கர்ப்பம்

Pregnant woman visiting gynecologist for monthly examination

கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கியால் பாரிய நன்மை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்ற நிலையில் நன்மை ஏற்பட்டுள்ளது.

இந்த வங்கியில் தானம் செய்பவர்களின் பல நோய்களுக்கான முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு, அவர்களின் விந்தணு வங்கியில் சேமிப்பில் வைக்கப்படுவதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.

பின்னர் தந்தையர்கள் மீண்டும் தொடர்புடைய சோதனைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். அந்த சோதனைகள் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திய பிறகு, விந்தணு சேமிப்புக்கு தயார் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த காலகட்டத்தில் விந்தணுவை சேமிக்க திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுவதால், அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு பரிசோதனைக்காக மீண்டும்வரும் விந்தணுக்களை தானம் செய்யும் தந்தையர்களிடம் ஒரு குறிப்பிட்ட பலவீனம் இருப்பதாகவும், அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்