செய்தி விளையாட்டு

ICC டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) டெஸ்ட் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையை பொறுத்த வரை ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். இவரையடுத்து ரபடா 2வது இடத்தில் உள்ளார். 3 மற்றும் 4வது இடங்களில் ஆஸ்திரேலிய வீரர்களான கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளனர். 5வது இடத்தில் நோமன் அலி உள்ளார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலன்ட் 6 இடங்கள் முன்னேறி 6வது இடத்துக்கு வந்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும்.

ஆஸ்திரேலிய வீரரான நாதன் லயன் 8வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 10வது இடத்திலும் உள்ளனர். மொத்தத்தில் இந்த தரவரிசையில் 5 ஆஸ்திரேலிய பவுலர்கள் டாப்10 இடத்திற்குள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தியா தரப்பில் பும்ராவை தவிர்த்து வேறுயாரும் டாப் 10ல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி