இலங்கை

இலங்கையில் நள்ளிரவில், நடிகையை காணவந்த இயக்குனர் – பொலிஸ் நிலையம் வரை சென்ற நடிகை!

இலங்கையில் பிரபல நடிகைக்கும் பிரபல திரைப்பட இயக்குனருக்கும் இடையே இன்று (22.07) காலை மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த நடிகையை காண திரைப்பட இயக்குனர் ஒருவர் நள்ளிரவில் பாணந்துறை பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு சென்ற நிலையில், இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இயக்குனர் தங்களை தாக்கி கார் சாவியை பறித்ததாக பிரபல நடிகையும் மற்றொரு பெண்ணும் பெலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில். இயக்குனரும் முறைப்பாடு அளித்துள்ளார். அவர்கள்  அளித்துள்ள முறைப்பாட்டில்,  இயக்குனர் தனக்காக கிட்டத்தட்ட 75 லட்சம் செலவு செய்ததாகவும், இன்று அதிகாலை, சுமார் மூன்றரை லட்சம் பெறுமதியான மொபைல் ஃபோன் மற்றும் கார் சாவியை எடுத்துச் சென்றதாகவும் கூறினார்.

பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுல்ல இரு தரப்பினருக்கும் உண்மைகளை விளக்கி முறைப்பாடுகளை வாபஸ் பெற்று சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்