வட அமெரிக்கா

அமெரிக்காவில் தாய் மீது கோபம் – அதிர்ச்சி கொடுத்த 2 பிள்ளைகள்

அமெரிக்கா – புளோரிடா (Florida) மாநிலத்தில் 2 பிள்ளைகள் அம்மாவின் காரை ஓட்டிக்கொண்டு நெடுஞ்சாலையில் சென்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 வயதுச் சிறுவனும் அவனது 11 வயது அக்காவும் காரில் சுமார் 320 கிலோமீட்டர் சென்றனர். இருவருக்கும் அம்மா மீது கோபம்.

அம்மா மின்சாரச் சாதனங்கள் அனைத்தையும் தங்களிடமிருந்து வாங்கிக்கொண்டதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நினைத்தனர்.

காரையும் பிள்ளைகளையும் காணவில்லை என்பதை உணர்ந்த தாயார் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். சிறுவன் கலிபோர்னியாவிக்குச் (California) காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது அதிகாரிகள் காரைக் கண்டனர்.

காரில் திருடர்களை எதிர்பார்த்த அவர்கள் பிள்ளைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். உடன்பிறப்புகள் இருவரும் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்