மோசமான காலநிலை காரணமாக 700 விமானங்களை ரத்து செய்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம்
Amsterdam Airport cancels 700 flights due to bad weather
ஐரோப்பாவின்(Europe) மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஆம்ஸ்டர்டாம்(Amsterdam) ஷிபோல்(Schiphol) விமான நிலையம், பனி மற்றும் காற்று காரணமாக 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதனால், 1,000க்கும் மேற்பட்டோர் ஷிபோல் விமான நிலையத்தில் ஒரு இரவை கழித்துள்ளனர்.
மேலும், பயணிகளுக்கு முகாம் படுக்கைகளை அமைத்து காலை உணவை வழங்கியதாக விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டோங்கர்(Stefan Donger) தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் ஐரோப்பா முழுவதும் வானிலை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது ஆறு பேர் இறந்துள்ளனர், பிரான்சில்(France) ஐந்து பேர் மற்றும் போஸ்னியாவில்(Bosnia) ஒருவர்.





