இந்தியா வட அமெரிக்கா

ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டாயிற்று; வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள்.இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Some ex-Indian students deported or have left Canada: Minister | Latest News India - Hindustan Times

அதைத் தொடர்ந்து, அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை, அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் வழங்க கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாயிற்று.

இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்களில் சிலர் ஏற்கனவே கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டாயிற்று என்றும், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.

அது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser, ஏற்கனவே சில இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர், வேறு சிலரோ, தாமாகவே கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content