ஆசியா

தொழில்நுட்பக் கோளாறால் ஹாங்காங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

ஹாங்காங்கிலிருந்து புது தில்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கிற்குத் திரும்பியுள்ளது.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங்கிற்குத் திரும்பியுள்ளது.

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் ஹாங்காங்கிற்குத் திரும்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான சில நாட்களுக்குப் பிறகு இன்று (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் விபத்தில் இறந்தனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்