இலங்கை

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பு : அமெரிக்காவின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது!

வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  “அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது படையெடுக்கலாம்,” எனவும் கூறியுள்ளார்.

இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும் எனவும்,  நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்