ஆசியா

சிங்கப்பூரில் கோர விபத்து – 26 வெளிநாட்டு ஊழியர்கள் படுகாயம்

சிங்கப்பூர் – கிராஞ்சி விரைவுச்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளனர்.

மூன்று லொரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து 18 அன்று காலை 7:10 மணியளவில் பொலிஸார் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

புக்கிட் திமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் வழியில் உள்ள சோவா சூ காங் வே மேம்பாலம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.

அதில் இரண்டு லாரிகள் வெளிநாட்டு ஊழியர்கள்களை ஏற்றிச் சென்றதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது, விபத்தில் சிக்கிய ஊழியர் ஒருவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் பலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அது தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய லாரி ஒன்றின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு லொரியின் முன் பயணிகள் இருக்கையில் சிக்கியிருந்த இருவரை ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி SCDF மீட்டது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்