உலகம்

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான புலம்பெயர் குழந்தைகள் : விசாரணைக்கு பரிந்துரை!

நியூயார்க்கில் உள்ள புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான காப்பகமான ‘சில்ட்ரன்ஸ் வில்லேஜ்’, (Children’s Village) குழந்தைகள் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது.

குறித்த காப்பகத்தில், குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துதல், கட்டுப்படுத்துதல் மற்றும் ‘சிவப்பு அறையில்’ தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட தீங்கு விளைவிற்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பதின்ம வயதுடைய சிறுவன் ஒருவர் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட முறை அடித்து துன்புறுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

டாப்ஸ் ஃபெர்ரியில் (Dobbs Ferry) அமைந்துள்ள இந்தக் காப்பகம், ‘குழந்தைகளின் நலன் குறித்த குறிப்பிடத்தக்க கவலைகள்’ காரணமாக ஜனவரி மாதம்  முதல் மூடப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் (HHS) கீழ் உள்ள அகதிகள் மீள்குடியேற்ற அலுவலகம் (ORR), குற்றச்சாட்டுகளைப் பெற்றவுடன் உடனடியாகக் குழந்தைகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொள்ள புலனாய்வுத்துறையினருக்கு பரிந்துரைத்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!