இலங்கை

தல்பிட்டிய பகுதியில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளான வேன்!

தல்பிட்டிய, வாத்துவ, ரத்நாயக்க வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்குள் நுழைந்த வேன் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த மெதுவான புகையிரதத்துடன் வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தை அடுத்து, வேன் ரயிலின் இன்ஜின் பெட்டியில் சிக்கியுள்ளது.  வேனின் வலது பக்கம் இருந்த நபர் அப்பகுதி மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், இடதுபுறத்தில் இருந்த பெண் புகையிரதத்திற்கும் வேனுக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புத் துறையினர் இணைந்து குறித்த பெண்ணை மீட்டுள்ளனர். அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேனில் இருந்தவர்கள்  இளம் ஜோடி காதலர்கள் என்றும், அவர்கள் கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததுடன், வேன் முற்றாக சேதமடைந்தது.

இது தொடர்பான விசாரணைகளை வடுவ பொலிஸ் பிரிவின் ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்