இலங்கை

இலங்கையில் இளைஞனுடன் உறவு – பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நீர்கொழும்பில் பெண்ணை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையிட்ட இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற இளைஞனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்ணை அச்சுறுத்தி 1,785,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை பலவந்தமாக பெற்றுக் கொண்ட இளைஞன் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று காலை முறைப்பாடு கிடைத்துள்ளது.

விசாரணையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நீர்கொழும்பு நகரிலுள்ள கடையொன்றில் தங்க நகையை சந்தேகநபர் விற்பனை செய்திருந்தமை தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த தங்க நகை உருக்கப்பட்டுள்ள நிலையில், 4 கிராம் எடையுள்ள தங்க கட்டியாக மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்