வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்து ; ஆற்றிலிருந்து 18 பேரின் உடல்கள் மீட்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட விபத்தில் போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அமெரிக்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமும், பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் விமானம் பல துண்டுகளாக போடோமாக் ஆற்றில் சிதறிக் கிடப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர் ஆற்றுக்கு அருகே விழுந்துள்ளது.

இந்த விபத்தை அடுத்து ராணுவம், காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். ஹெலிகாப்டர் மற்றும் படகு மூலமாக அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. இதில் இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமான புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவசர நிலை குறித்த அறிவிப்பும் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதே போல ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்