இலங்கை

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு…

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது.

தீப்பற்றிய நேரத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்பதுடன் தீப்பற்றிய வீட்டின் தீயை அணைக்க அயலவர்கள் போராடி தீயணைப்பை மேற்கொண்டதுடன் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் துரித நடவடிக்கையின் பயனாக விரைந்து வந்த கல்முனை மாநகர தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

தீயினால் வீட்டின் பொருட்கள் முற்றாக சேதமாகியதுடன் வீட்டின் கூரையும் அழிவடைந்துள்ளதுடன் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவிலை.

ஸ்தலத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க விரைவாக தேவையான மேலதிக நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்திருந்தார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content