ஐரோப்பா

பிரான்ஸில் பேருந்து ஒன்றுக்குள் ஏற்பட்ட பரபரப்பு!

பிரான்ஸில் பேருந்து சாரதி மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Athis-Mons (Essonne) பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவருக்கும் பேருந்து சாரதிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததை அடுத்து,. பேருந்து சாரதியை குறித்த நபர் தாக்கியுள்ளார்.

கத்தி ஒன்றினால் அவர் குத்தப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சாரதி கொண்டுசெல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பொலிஸார் முன்னதாகவே அறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்