ஐரோப்பா

RAF Fairford, சம்பத்தின் பின்னணியில் ஈரான் – பர்னம் தகவல்

அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் இங்கிலாந்து விமானப்படைத் தளத்திற்கு அருகே ஈரான் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான “வலுவான அறிகுறிகள்” இருப்பதாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார்.

இது பெரும் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

RAF ஃபேர்ஃபோர்டில் (RAF Fairford) நடந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிபிசி ஊடகத்திடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனு்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நிச்சயமாக, இது தொடர்ந்து நடைபெற்று வரும், சிக்கலான மற்றும் தீவிரமான காவல் துறை விசாரணையாகும்,” என்றார்.

அதேநேரம் ஸ்கை நியூஸிடம் (Sky News) பேசிய பர்னம், நாங்கள் எதைச் சொல்லலாம் என்பதை உறுதிப்படுத்தக் காத்திருந்தோம், ஆனால் இப்போது ஈரானுக்கு இதில் பங்கு இருந்திருக்கலாம் என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்த முடியும்,” என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவிக்கும் முதல் அதிகாரப்பூர்வமான கருத்து இதுவாகும். அந்த அச்சுறுத்தலின் தன்மை குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்